பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்துவதற்காக, மின்சார வாரியம் தற்போது அதிரடியான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்தே நுகர்வோருக்கான 200 யூனிட் இலவச மின்சாரக் கணக்கீடு முறை அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு, நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தச் சுற்றறிக்கையில் ஒரு முக்கிய ட்விஸ்ட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வீட்டுக்கான மின்சாரப் பயன்பாடு மொத்தம் 500 யூனிட்களுக்கு மேல் தாண்டும் பட்சத்தில், அவர்களுக்கு 200 யூனிட் இலவசம் என்பது பொருந்தாது என்றும், அதற்குப் பதிலாக 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசமாகக் கணக்கிடப்படும் என்றும் மின்சார வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. மின் கட்டணக் குறைப்பு மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த இந்த முக்கிய அறிவிப்பு, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
