தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தைச் சந்தித்துள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது ஒட்டுமொத்த ரத்தத்தின் ரத்தங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
இந்த துரோகத்தால் ஆத்திரமடைந்துள்ள இபிஎஸ், தனக்கு துரோகம் செய்துவிட்டு தவெக அரசுக்கு ஆதரவளித்த வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேரையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளார்.
இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் கொங்கு மண்டலம் முதல் கோட்டை வரை உள்ள அரசியல் வட்டாரங்கள் அனைத்தும் தற்போதைய நிலவரத்தை நகம் கடித்தபடி உற்று நோக்கி வருகின்றன.
