மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களின் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் நல்ல மனதை புரிந்து கொள்ளும் காலகட்டம் வந்து விட்டது. இனிவரும் செயல்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நம்பிக்கையுடன் நடந்து கொள்வீர்கள். இன்று சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் மாற்றங்களை மேற்கொண்டு லாபத்தை பெறுவீர்கள்.

இன்று முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க முடியும். அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லா வகையிலும் நன்மை இருக்கும் பயம் வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான நல்லது நடந்தேறும். இன்று பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும். துணிச்சலுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு புது விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி மீது அக்கறை ஏற்படும். முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் மூன்று

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்