மேஷம் ராசி அன்பர்கள்,

இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். பார்க்க நினைத்தவர்கள் வீடு தேடி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சாமர்த்தியமான செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். இன்று கௌரவம் உயரும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

இறைவன் அருள் பூரணமாக கிடைக்கும். தன்னம்பிக்கை இழந்து விட வேண்டாம். பெண்கள் இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பயணங்கள் செல்லும்போது கவனமாக இருங்கள். விடாப்பிடியாக சில முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். விளையாட்டுத்தனமாக இருப்பீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு, மூன்று மற்றும் நான்கு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்