ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று புகழ்ச்சிக்கு எல்லாம் மயங்க மாட்டீர்கள். காரியங்களை கனகச்சிதமாக செய்து முடிப்பீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். பாராட்டும் புகழும் கண்டிப்பாக கிடைக்கும். பண வரவு திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு பிடித்தமானவர்களாக காணப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். புது முயற்சியால் லாபம் ஏற்படலாம். பண வரவு சீராக இருக்கும்.

திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள். புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுவீர்கள். ஏற்றங்கள் மாற்றங்கள் ஏற்படும்.

இன்று மாணவர்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட முடியும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடக்க பாருங்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஒன்று ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்