மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் சாதுரிய பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பல வழிகளில் பண வரவு ஏற்படும். பெரிய மனிதர் என்று நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். அனுகூலமான நல்ல பலன் ஏற்படும். பணவரவு திருப்தியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

வாகனங்களின் பயணிக்கும் போது கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு கனவுகள் நினைவாகும். காரியங்கள் கைகூடும். இஷ்ட தெய்வத்தை வணங்கி இந்த நாளை தொடங்குவது நல்லது.

இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வருகின்ற தேர்வில் வெற்றி பெற கொஞ்சம் முயற்சி தேவை. காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பது நல்லது. இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்