மீனம் ராசி அன்பர்களே,

இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். பேச்சிலும் செயலிலும் உறுதி நிறைந்து காணப்படும். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். மன மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவற்றை சந்திக்க வேண்டியது இருக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறக்கூடும்.

ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2, 5 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்