மேஷம் ராசி அன்பர்களே,

இன்று சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்காக செயல்படுவீர்கள் அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டுக்கூடும். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடுகள் வரக்கூடும். பண வரவு சீராக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். முழு கவனத்துடன் செய்யும் காரியம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.

உறவுகளிடம் நிதானமாகவே நடந்து கொள்வீர்கள். முன்னேற்றத்திற்காக கடினமாக உழைப்பீர்கள். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். இன்று பெண்கள் கோவில் குளங்களுக்கு செல்லும் சூழல் உருவாகும். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

பெண்களுக்கு இஷ்டதெய்வம் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறையுடன் செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் வெற்றி பெறுவீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்