ரிஷபம் ராசி அன்பர்களே

இந்த நாள் மாறுபட்ட நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டால் மகிழ்ச்சியை இழப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிய முடிப்பது நல்லது. சேமித்து வைத்த பணம் பயன்படும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பிர்கள்.  வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துக் செல்வீர்கள். எந்த வேலையில் நீங்கள் ஈடுபட்டாலும் அந்த வேலை கொஞ்சம் காலதாமதாமாகும்.

இன்று தொழில் தொடர்பான காரியங்களில் நஷ்டம் ஏற்படலாம். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் பணிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். இன்று பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

இன்று சூழ்நிலை புரிந்து கொண்டு  செயல்படுங்கள். பணி சுமை அதிகமாக  இருக்கும் .இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவீர்கள். கல்வி மீது அக்கறை இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  2 மற்றும் 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் மஞ்சள்