மீன ராசி அன்பர்களே

இன்று கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். வேண்டியவற்றை பெற்றுக் கொள்வீர்கள். திருமண வாய்ப்புகள் கைக்கூடி வரும். நல்ல நண்பர்கள் கை கொடுக்க  முன் வருவார்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடியும்.

இன்று மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.இன்று மன நிம்மதி அதிகரிக்கும். நல்ல பெயர் கிடைக்கும். புகழ்ச்சிக்கு மயங்கமாட்டீர்கள். ஆனால் மனதில் வீண் ஆசைகள் ஓடிக் கொண்டிருக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது. இன்று பெண்களுக்கு ஓய்வு இருக்கும். பணிகளை சீக்கிரம் முடித்து விடுவீர்கள்.

இன்று கணவரிடம் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கல்வியில் வெற்றி பெற முடியும். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  ;  பச்சை மற்றும் நீல நிறம்