கும்ப ராசி அன்பர்களே,

இன்று திறமையால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். வெற்றிக்காக கடினமாக உழைத்து சாதிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வருமானம் இரு மடங்காகும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நல்ல நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். நிதி உதவிகள் கிடைக்க பெறும்.

இன்று செல்லும் இடமெல்லாம் சிறப்புகள் உண்டாகும்.  இனிய கனவுகள் நனவாகும்.  மேலும் உங்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். தன வரவு சீராக இருக்கும். இந்த நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்கள் இன்று அனைவருக்கும் ஆதரவாக இருப்பீர்கள். நல்ல பண்புகளை கற்றுக் கொள்வீர்கள்.

இந்த நாளை இனிமையாக கொண்டாடுவீர்கள். இன்று மாணவர்கள் குழப்பங்கள் ஓரளவு தீரும். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உயர்கல்விகள் கற்பதில்  ஆர்வம் அதிகரிக்கும். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்