மகர ராசி அன்பர்களே,

இன்று நன்மைகள் கண்டிப்பாக நடைபெறும் நாள்.  வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பமான மனநிலை மாறும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.

இன்று நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

இன்று இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆலயங்கள் சென்று வருவீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கிறது. கல்வியில் முழு அக்கறை கொள்ளுங்கள். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஒன்று மற்றும் ஐந்து

அதிர்ஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்