அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக கடந்த 13-ம் தேதி இந்தியா வந்திருந்தார். கொல்கத்தா, மும்பை, டெல்லி எனப் பல இடங்களுக்குச் சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப் பங்கேற்றார். இந்த இந்தியப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, மும்பையில் நேற்று (டிசம்பர் 16) பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, மெஸ்ஸியைச் சந்தித்துப் பேசினார்.

​இந்தச் சந்திப்பின் போது, மெஸ்ஸி மீதுள்ள அன்பின் அடையாளமாக ஆனந்த் அம்பானி அவருக்கு மிக விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார். ‘ரிச்சர்ட் மில் RM 003 V2’ (Richard Mille) என்ற ஆசிய எடிஷன் வகை கடிகாரமான இதன் மதிப்பு சுமார் 10.91 கோடி ரூபாய் ஆகும். உலகப்புகழ் பெற்ற ஒரு வீரருக்கு, இந்தியத் தொழிலதிபர் வழங்கிய இந்த பிரம்மாண்டப் பரிசு தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.