உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். ஃபார்வர்டு செய்யப்படும் மெஸ்ஸேஜ்களையும் திருத்தி அனுப்பி அனுப்பும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்கிறது. இதன்மூலம், ஃபார்வர்டு மெஸ்ஸேஜ்களில் தேவையானவற்றை சேர்த்தும், நீக்கியும் அனுப்பலாம். இந்த வசதி பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு ஏற்கனவே இருக்கிறது. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிகிறது.