தமிழக அரசியலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“இன்னும் இரண்டு நாட்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) விஜயகாந்தின் தேமுதிக இணைவது என்பது உறுதியாகிவிடும். கூட்டணி குறித்த இறுதி முடிவை பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.” முன்னதாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ராம ஸ்ரீனிவாசன் அளித்துள்ள இந்த விளக்கம், தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி தேமுதிக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
