தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம் போடாமல் இருக்கும்படி பெரம்பாயியிடம் கூறிக் கொண்டே இருந்தார்.

அதன் பிறகும் அவர் தொடர்ந்து சத்தம் போட்டதால் கோபத்தில் சூர்யா வீட்டிலிருந்த சிறிய விளக்கால் பெரம்பாயியை தாக்கினார். இதனால் படுகாயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.