ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத மாநாடு கட்சி கூட்டணி அமைத்த போட்டியிட்ட நிலையில் அவர்கள் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ‌ காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் முதலமைச்சரவை கூட்டத்தை நடத்திய போது காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். இந்நிலையில் ‌ முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி என்று முத்திரை குத்துகிறார்கள். இங்கு காஷ்மீரிகளுக்கு மட்டும் தான் இடம் இருக்கும் என்றும், ஜம்முவை சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்காது என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஜம்முவை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவரை தான் எங்கள் கட்சியின் துணை முதல்வராக நியமித்துள்ளோம் . எனவே தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி என்று முத்திரை குத்தாதீர்கள் என்று கூறினார். மேலும் அக்கட்சியை சேர்ந்த சுரேந்தர் குமார் சவுத்ரி என்பவர் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.