டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூரு என இந்தியாவின் டாப் நகரங்கள் அனைத்திலும் வாழ்ந்து பார்த்த ஒரு டெலாய்ட் (Deloitte) மேலாளர், இப்போது ஹைதராபாத் தான் இந்தியாவின் ‘பெஸ்ட்’ நகரம் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார். 11 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட கோமல் ஜா, கடந்த 9 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மற்ற மெட்ரோ நகரங்களை விட இங்குதான் வாழ்க்கைத் தரம் (Quality of Life) மிகச்சிறப்பாக இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் ஒரு சொகுசான வாழ்க்கையை வாழ அவர் மாதம் ஒரு பெரிய தொகையைச் செலவிடுகிறார். அவரது மாத பட்ஜெட்டில் வாடகைக்காக ₹50,000, குழந்தைகளின் கல்விக்காக ₹30,000, வீட்டு வேலை ஆட்களுக்கு ₹20,000 மற்றும் மளிகைப் பொருட்களுக்கு ₹15,000 எனப் பட்டியல் நீள்கிறது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தாலும், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப நகரத்தின் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதும், அதே சமயம் தரமான வாழ்க்கையை அனுபவிப்பதும் ஹைதராபாத்தில் மட்டுமே சாத்தியம் என்கிறார் இந்த கார்ப்பரேட் பெண்மணி
