வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழில் விஜய் நடித்திருக்கும் “வாரிசு”, அஜித் நடித்திருக்கும் “துணிவு” மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து உள்ள “வால்டர் வீரய்யா”, பாலகிருஷ்ணா நடித்துள்ள “வீரசிம்ஹா ரெட்டி” போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அமெரிக்க நாட்டிலும் இந்த 4 படங்கள் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியாகிறது. எனினும் தமிழ் படங்களான வாரிசு, துணிவு உள்ளிட்ட 2 படங்களை விட தெலுங்குப் படங்களான வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களின் முன் பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

பிரிமீயர் காட்சிகளைப் பொறுத்தவரை வீரசிம்ஹா ரெட்டி படத்துக்கான முன் பதிவு 3 லட்சம் அமெரிக்க டாலர்களையும், வால்டர் வீரய்யா முன்பதிவு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும், துணிவு முன்பதிவு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், வாரிசு முன்பதிவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் கடந்து உள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி திடீரென்று மாற்றப்பட்டதால் அதன் முன் பதிவு பின்தங்கி விட்டதாக கூறுகிறார்கள்.