இந்தியாவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்றமார்ச் ஐந்தாம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகள் கடந்த எட்டாம் தேதி தொடங்கியது.

இதற்கான காலக்கெடு ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. அதனால் மாணவர்கள் என்ற இணையதளம் மூலமாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு தேர்வுக்கான அனுமதி சீட்டு பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.