2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் நேற்று அல்வா கிண்டி வழங்கினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கிறது. இதனால் நடுத்தர மக்களை கவரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறலாம்.