
இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தநிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கூன் முதுகு கொண்ட முதியவர் ஒருவர் தன்னுடைய செல்ல வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செல்கின்றார். அந்த நபர் முதுமை தொடர்பான பிரச்சனையால் மிக மெதுவாக நடந்து செல்லும் நிலையில் பிடிமானத்திற்காக அவர் கையில் ஒரு கம்பையும் வைத்துள்ளார்.
தனது எஜமானரின் உன் வயது நிலைமையை நன்கு அறிந்து கொண்ட அந்த நாய் எந்தவித வேகம் மற்றும் அவசரத்தை காட்டாமல் அவருக்கு ஈடாக மிக மெதுவாக நடந்து செல்கின்றது. சில நேரங்களில் சிறிது தூரம் நடந்து சென்று விட்டு அதன் பிறகு தன்னுடைய எஜமானுக்காக பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Patient Dog Walks Extremely Slowly With Elderly Owner pic.twitter.com/WwGfenxWnY
— Animals Being Bros (@animalbeingbro) August 6, 2023