அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார் அனிகா. இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில் அனிகா நடித்த ஆல்ப்ரெட் சாமுவேல் இயக்கத்தில் ‘ஓ மை டார்லிங்’ படத்தின்  ட்ரைலர் சமீபமாக வெளியான நிலையில், அனிகாவின் கவர்ச்சி, லிப்லாக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், முதல் படத்திலேயே எல்லை மீறுவதாக விமர்சித்து வருகின்றனர்.