மதுபான கொள்கை வழக்கில் கைதாகி தற்போது திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய் அன்று அவரது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர் மேலும்  உடல் நல பாதிப்பு காரணமாக அவர் 4.5 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.