தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமிதாப்பச்சன், ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களே பிரதமர் மோடியின் நடிப்பை பார்த்து பொறாமை கொள்வதாக திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கிண்டல் அடித்துள்ளார்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர், பிரதமர் மோடி வாக்குகளுக்காக பல உடைகளை மாற்றி நடிப்பதாக விமர்சித்தார். தமிழ் தனது தாய் மொழியாக இல்லையே என வருத்தப்படுவதாக கூறும் பிரதமர் தமிழுக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.