மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுடைய ஆதரவு திமுகவிற்கு அதிகம் உள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக தேர்தல் நெருக்கத்தில் இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்து பயனாளர்கள் இல்லாதவர்களையும் ஈர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக வை பொருத்தவரை இந்த முறை வேட்பாளர் தேர்வுகளில் உதயநிதி ஸ்டாலின் கையே ஓங்கி இருக்கிறது. இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை  திட்டத்தின் செயல்படுத்தப்பட்ட பிறகு பெண்களுடைய ஆதரவு திமுகவிற்கு அதிகரித்துள்ளதாக அந்த டீம் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது.

அதாவது 70 சதவீத பெண்களுடைய ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக எந்த ஒரு திட்டத்திற்கும் ஒதுக்காத மிகப்பெரிய தொகையை தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒதுக்கி செயல்படுத்தியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மகளிர் உரிமைதொகை திட்டத்தின் மீது தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டை கிடைத்த பிறகு அவர்களின் தகுதியானவர்கள் மகளிர் உரிமைக்காக திட்டத்திற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூட படுகிறது.