கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் இந்த ரயில் திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி, ஸ்ரீ வைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே சத் பூஜையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று நவம்பர் 18 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு ஒடிசா மாநிலம் குர்தாசாலைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து கூடூர், நெல்லூர், விஜயவாடா, விஜயநகரம் மற்றும் பலாஷா வழியாக குர்தாசாலை சென்றடையும் எனவும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.