தமிழக அரசு மின் கட்டணத்தை ஒரேயடியாக 40 முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல் உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் கடும் அவஸ்தையில் உள்ளது. இதற்கு முன்பாக  தன் வீட்டிற்கு ரூ.3,000 மின் கட்டணம் வந்ததாகவும், தற்போது ரூ.10,000 மின் கட்டணம் வருவதாகவும் கூறி வேதனையடைந்துள்ளார்.