பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், திருமணமான இரண்டே நாட்களில் மணமகன் கொடுத்த அதிர்ச்சியால் ஒரு குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி கோலாகலமாகத் திருமணம் முடிந்த நிலையில், மே 1-ம் தேதி மணப்பெண் தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் முதலிரவு அன்று தனக்கு ஹாஜிப்பூரில் உள்ள கல்லூரியில் முக்கியமான தேர்வு இருப்பதாகக் கூறி, தன்னை அங்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் அப்பெண் கெஞ்சியுள்ளார். மனைவியின் கல்வியில் அக்கறை கொண்ட கணவரும், அவரை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் கல்லூரி வாசலை அடைந்ததும், பேனா வாங்கி வருவதாகக் கூறி உள்ளே சென்ற மணப்பெண், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. வெளியில் வெயிலில் காத்துக்கொண்டிருந்த கணவர், சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மனைவி அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் அன்றைய மாலை வீட்டில் திருமண வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மணப்பெண் ஓட்டம் பிடித்தது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் காதல் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மணமகன் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
