
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடியை நீதிமன்றம் அங்கீகரித்து இருக்கிறதே தவிர, மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இரண்டு சாட்சி. ஒன்று ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்….. இரட்டை இலை சின்னம்…. நாங்கள் போட்டியிடவில்லை…. தினகரன் போட்டியிடவில்லை. ஆனாலும் பத்தாவது சுற்றிலே கட்டுத்தொகை காப்பாற்றுவதற்கு அவர் முட்டி போட்டு முழி பிதுங்கிய நிலையை தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள்.
ஈரோட்டில் அம்மா 1989இல் அதிமுகவின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது ஐந்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளரிடம் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தோற்றார் என்று சொன்னால், எடப்பாடியை நீதிமன்றங்களிலேயே தீர்ப்புகள் இருக்கலாமே தவிர, மக்கள் மன்றம் நிராகரித்துவிட்டது என்பதற்கு ஈரோடு கிழக்கு ஒரு சாட்சி.
அதற்குப் பிறகு சமீபத்திலே பசும்பொன்னுக்கு அதிகாலை நேரத்தில் ஆட்கள் கூடுவதற்கு முன்பே…. ஆளும் கட்சியோடே சேர்ந்து கொண்டு…. திமுகவினுடைய முதலமைச்சரின் ப்ரோடோகாலை ஒட்டி அப்படியே…. அதிகாலையில் ஆட்கள் வருவதற்கு முன்பே வந்தார். ஒரு நல்ல தலைவன் என்றால், முகூர்த்தத்திற்கு தான் வர வேண்டும்… பொண்ணு மாப்பிள்ளை மேடையில் இருக்கும்போது வந்து வாழ்த்தினால் தான் வாழ்த்து.
காலையில கல்யாண மண்டபத்தில்….. அடுப்பை பத்த வச்சுட்டு இருக்கும்போது வந்துட்டு போனா….. அது முகூர்த்தத்துக்கு வருவதில்லை. அதுபோல பசும்பொன்னுக்கு பயந்து பயந்து பௌன்சர்கள் சகிதமாக எடப்பாடி பயந்து ஓடினார். ஆனாலும் அண்ணன் ஓபிஎஸ்-க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எடப்பாடிக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு என்ற அடிப்படையில் ஒற்றை செருப்பு அவரை வரவேற்றது என தெரிவித்தார்.