ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் சிக்கல்களில் தப்பித்துக் கொள்வதற்காக கட்டாயமாக ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கார்டு ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்ப ர் மாதம் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக ஆதார் கேஒய்சி விவரங்களை சரி பார்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 பிறகு ஆதாரை ரேஷன் கார்டு இணைக்காவிட்டால் உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதன் பிறகு ரேஷன் கார்டுடன் தரப்படும் எந்த சலுகையும் கிடைக்காது. எனவே உடனே இந்த வேலையை முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.