கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபலமான உள்ள கல்லூரி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. அவிநாசி சாலையின் இரண்டு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் வரை சாலை நடுவே மாணவர்கள் செல்வதற்கு ஏற்றவாறு இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது . இந்த கல்லூரியில் படித்து முடித்த லட்சக்கணக்கான மாணவர்களின் கல்லூரி கால நினைவுகளை சுமந்து கொண்டு கடந்து செல்லும் இடமாகவும் இந்த பாலம் இருந்தது. இந்த நிலையில் அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கும் பணியானது 1627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் பொழுது இந்த பழமையான இரும்பு பாலமும் அகற்றப்பட்டது. மேலும் மாணவர்கள் சாலை கடப்பதற்காக பிஎஸ ஜி தொழில்நுட்பக் கல்லூரி முன்பு புதிய சிக்னலும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இரும்பு பாலத்தின் வழியாக கடந்து வந்த மாணவர்கள் தற்போது தரை வழியாக சாலை கடந்து செல்கிறார்கள் . மேம்பாலம் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் மீண்டும் மாணவர்களுடைய வசதிக்காக அவிநாசி சாலை கடக்கும் விதமாக இரும்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.