ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூபாய் 108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமேஸ்வரம் மண்டபம் அருகே 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும், கடலோர காவல் படை அதிகாரிகளும் சேர்ந்து இந்த பறிமுதலை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. போதைப் பொருளின் மதிப்பு என்பது 108 கோடி மதிப்பு என குறிப்பிடுகின்றனர். கஞ்சா,அபின் போன்ற பல்வேறு விதமான போதை பொருள்கள் இருக்கும் நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது ‘ஹசிஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அதிகாரிகளின் தகவலின் படி ஒட்டுமொத்த போதை பொருளின் மதிப்பு என்பது 108 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறைக்கு  கிடைத்த அந்த ரகசிய தகவல் அடிப்படையில் மத்திய வருவாய் துறையினரும், கடலோர காவல் படை அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடத்தல் ஈடுபட்ட நபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இலங்கைக்கு கடத்த வைத்து இருந்த அந்த போதை பொருளை மொத்தமாக தூக்கி உள்ளனர். இதற்கு காரணமான அந்த முக்கிய  நபரை வீட்டிலிருந்து கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விசாரணையில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருளை கடத்த தேவையான ஏற்பாடுகளை அவர் செய்து வந்துள்ளார். அந்த நபர்தான் முக்கிய நபராக இருப்பார் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகின்றது.

111 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 98 கிலோ ‘ஹசிஸ்’ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு  கொண்டு சென்ற பிறகு இலங்கையில் வைத்து பிரித்து சிறு சிறு பொட்டலங்களாக அவற்றைக் கட்டி அங்கு இருக்ககூடிய இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் விற்பனை செய்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 நபர்களிடம் விசாரணை நடத்திய போது, விவரம் தெரியவந்துள்ளது.

இந்த போதை பொருளை கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீன்பிடிக்க செல்வது போல அவர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து இந்த பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.