டிக்கெட் இல்லாத வருவாய் அதிகரிக்கும் விதமாக முக்கிய நிலையங்களுக்கு அருகில் வணிகம், பொழுதுபோக்கு, மினிமால் மற்றும் அலுவலக கட்டிடங்களை உருவாக்குவதற்கு சிஎம்ஆர்எல் முடிவு செய்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது தன்னுடைய மெட்ரோ சேவை மூலமாக தினமும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கி வருகிறது . சேவை மட்டுமின்றி பயணிகளுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற விதமாக டிக்கெட் முறையில் புதிய வசதிகளை ஏற்படுத்துவது, நவீன வசதிகளோடு பார்க்கிங் அமைப்பது சில நிலையங்களில் கடைகள், உணவகங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இப்படி டிக்கெட் வருவாய் மட்டும் நம்பி இருக்காமல் டிக்கெட் அல்லாத வருவாய் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகி வருகிறது . இந்த நிலையில் தற்போது சிஎம்ஆர் ஆல்  பெரிய அளவில் மினிமால்கள், வணிகம், பொழுதுபோக்கு தளங்கள் அடங்கிய பல மாடி கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட முடிவெடுத்துள்ளது. அதன்படி நேரு பூங்காவில் 9 மாலை கோபுரமும், சைதாப்பேட்டை சுரங்க பாதைக்கு மேலே இரண்டு மாடி வர்த்தக கட்டிடமும் அரும்பாக்கத்தில் மினி மாலுடன் கூடிய 7 மாடி கட்டிடமும் கட்டப்பட உள்ளது .இதற்கான பணிகள் ஒருசில நாட்களில் தொடங்க இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.