கடல் ஆழத்தின் மர்மமான உயிரினங்களில் ஒன்றான ‘முகமற்ற கஸ்க் விலாங்கு மீன்’ சுமார் 4,000 மீட்டர் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதியில் வசிக்கிறது. கண்களோ, மூக்கோ அல்லது முகமோ இல்லாத இந்த விசித்திரமான மீன், பார்ப்பதற்கு ஒரு சதைப்பிண்டம் போலத் தோற்றமளிக்கும்.

இது 1873-ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டாலும், நீண்ட காலமாக மனிதர்களின் கண்களில் படாமல் மறைந்திருந்தது. பின் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பெருங்கடலில் மீண்டும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளியே படாத அந்த ஆழ்கடல் பகுதியில் வாழப் பழகியதால், பரிணாம வளர்ச்சியில் இந்த மீன் தனது கண்களை முற்றிலும் இழந்துவிட்டது.

இந்த மீனின் வாய் அதன் தலைக்குக் கீழே வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளதால், முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது முகமே இல்லாதது போல் தோன்றும். கடலின் மிக அதிக அழுத்தத்தைத் தாங்கும் வகையில் இதன் உடல் ஜெல்லி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Salt Dark Files (@saltdarkfiles)

“>

கண்கள் இல்லாவிட்டாலும், இதன் தலையில் உள்ள சிறப்பு உணர்திறன் உறுப்புகள் தண்ணீரில் ஏற்படும் சிறிய அதிர்வுகள் மற்றும் வாசனையை உணர்ந்து, உணவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து வேட்டையாட உதவுகின்றன.

இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த மீன், மனிதர்கள் வாழ முடியாத பாதாள உலகில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறது.