
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்கரமாக வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.