மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் கட்டணம் இல்லாத தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் மே இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண விருப்பமுள்ளவர்கள் hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.