தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயமாக பட்டுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நேற்று புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதில் தலைநகர் சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா முதல் மூன்று அலையை போல வேகமாக உயரும் என வீதி அடைய தேவை இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாலும் முதியோர்கள் மற்றும் நோயுற்றவர்கள் நெரிசலான இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.