மீனம் ராசி அன்பர்களே,

இன்று மன தடுமாற்றம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக விலகிச் செல்லும். வெற்றிக்காக கடுமையாக போராடுவீர்கள். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தன வரவு சீராக வந்து கொண்டிருக்கும் வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சுலபமாக முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப தேவை அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். கவலைகள் குறையும். சிந்தித்து எந்த செயலிலும் ஈடுபடுவீர்கள்.

இன்று மாணவர்கள் கலைத்துறையில் ஆர்வமாக இருப்பீர்கள். படிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்