கும்பம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால், சில பணிகளை முன்னெச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். நேரம் காலம் பார்த்து சில பணிகளில் ஈடுபடுவது நல்லது. எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும் கவலை வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். ஆதாயத்தை சீராக பெருக்கிக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் ஓரளவு புதுப்புது விஷயங்களை கொண்டு வருவீர்கள். மனதை திருப்தியுடன் வைத்துக் கொள்ளுங்கள் அது போதும். வியாபாரம் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். இன்று பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் காலையிலேயே குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2, 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்