மகரம் ராசி அன்பர்களே,

இன்று தேவை இல்லாமல் குழம்பி கொள்ள வேண்டாம். தானாக எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். நேரம் காலம் பார்த்து சில பணிகளில் ஈடுபடுங்கள்.

எல்லாவற்றிலும் சந்தோஷம் ஏற்படும். மனக்கவலை ஏற்பட்டாலும் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும். பயப்பட வேண்டாம். இன்றைய தினத்தை பொன்னான நாளாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. வியாபாரத்தில் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இன்று பெண்களுக்கு திறமையால் வெற்றி பெற முடியும்.

மண வாழ்கையில் மகிழ்ச்சி அடைவீர்கள். தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். விளையாட்டு துறையிலும் சாதிப்பீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 4, 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்