ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், இப்போது கட்டண சலுகையின் பலனை பெறுவீர்கள். முன்பாக மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே நிர்வாகமானது அளித்து வந்தது. அதை இப்போது திரும்பப்பெற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ரயில் கட்டண சலுகையின் பலனை மூத்தக்குடிமக்கள் பெறுவார்கள் என்று இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், தியாகிகளின் மனைவி மற்றும் விருது பெற்றவர்களும் ரயில்வேயின் சலுகைகளின் பலனைப் பெறுகின்றனர். அதோடு மாணவர்களும் நோயாளிகளும் ரயிலில் பலவகை தள்ளுபடிகளை பெறுகின்றனர்.