டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற நிலையில் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்கக்கூடாது.

ரயில் டிக்கெட் இன்றி பயணிப்பது கண்டறியப்பட்டால் ரயில்வே சட்டத்தின் 138-வது பிரிவின் கீழ் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இது தவிர்த்து பயணிகளை சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே எப்போதும் ரயில் டிக்கெட் எடுத்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.