பொதுவாகவே பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. உணவுகளை பொருத்தவரையில் மற்ற உணவுகளை விட பிரியாணியை பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பு ஆண்டில் நொடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 5.5 சிக்கன் பிரியாணிக்கு மத்தியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு ஸ்விக்கியில் 4.30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளன. 2.49 கோடி பேர் முதல் முறையாக ஆர்டர் செய்தது பிரியாணியை தான்.