பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.  அதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தனித் தீர்மானம் தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடகா நீர் தர மறுக்கிறது. நாம் ஒன்றும் அவர்களிடம் யாசகம் கேட்கவில்லை நம்முடைய உரிமையை மட்டும் தான் கேட்கிறோம்.

இதற்கு மேலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தற்கொலைக்கு சமம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவைவிட விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருக்கிறது கர்நாடக அரசு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோதே கர்நாடக டகா அசையவில்லை. நம் ஒற்றுமையால் மட்டுமே காவிரி விவகாரத்தில் சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில் கர்நாடகா அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.