பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். 

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் விஜய் பேசிய வசனம் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் இப்படி பேசக்கூடாது என்றெல்லாம் அறிவுரை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உடைய பிறந்தநாளுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமீப காலமாக அவர் அரசியல் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.