நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.