தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வீடியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது.

அதில் ஜெய்பூரில் உள்ள கோட்டையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திலிருந்து, ஈபில் டவர் கோபுரத்திலிருந்து திருமணம் முன்மொழிவு வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலை வருவதாகவும், இருவரும் விவாகரத்து பெற போவதாக சமூக ஊடக தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் அதனை சோஹைல் மறுத்திருந்தார். தற்போது சில தினங்களுக்கு முன் நடிகை ஹன்சிகா தனது instagram பக்கத்தில் உள்ள கணவருடனான எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். அதனால் அவர்களது உறவில் விரிசல் அதிகரித்திருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இருப்பினும் அது குறித்து இருவரும் எந்த ஒரு உறுதியான தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதனிடையில் நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இந்த வருடம் தனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்ததாகவும் சோகமான ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ஒருவேளை இதன் மூலம் தனது திருமண வாழ்வு குறித்து வெளிப்படுத்தி உள்ளாரா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.