நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராசி’ திரைப்படத்தின் மெர்சலான மேக்கிங் வீடியோ வெளியானது இணையத்தில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘அமரன்’ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகும் இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
Just 25 days left… This is the final run, and we’re not backing down 🔥
A special sneak peek into the racy mood of #Madharaasi 💥
▶️ https://t.co/jeiUb0UQWQ#DilMadharaasi#MadharaasiFromSep5@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial @VidyutJammwal… pic.twitter.com/xOB9cpE2qi
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 11, 2025
“>
இணையத்தை கலக்கும் வகையில் வெளியான இந்த மேக்கிங் வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. ‘மதராசி’ படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
