கமல்ஹாசன் இப்போது டைரக்டர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பின் கமல், மணிரத்னம் டைரக்டில் “கேஎச்234” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இதற்கிடையில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்க இருக்கிறாராம்.

இப்படத்தின் கதையில் சில திருத்தங்கள் உள்ளதால் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் (அ) செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.